விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறான சேதம் ஏற்பட்டிருக்கும் : எவரும் உயிருடன் இல்லை

Report Print Murali Murali in அரசியல்

இறுதி யுத்தம் தொடங்கியது முதல் 5 ஆயிரம் இலங்கை படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலமிக்க இராணுவத்துக்கே இந்த நிலை என்றால், விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறான சேதம் ஏற்பட்டிருக்கும்?

இலங்கை படையினரிடம் இருந்த பலம் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், காணாமல் போனதாக கூறப்படும் சிலர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவ்வாறு கனடாவில் வாழும் ஒருவரை நவநீதம்பிள்ளை அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

மேலும், தடுப்புக் காவலில் இருப்பவர்களை தவிற வேறெவரும் இல்லை என்பதை நவநீதம்பிள்ளையிடம் எடுத்து கூறியிருந்தேன். அப்போது தடுப்பு காவலில் இருந்தவர்களின் பெயர் விபரங்களும் இருந்தன.

எவ்வாறயினும், தடுப்பு காவலில் இல்லாதவர்களின் உறவினர்கள் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தனர். ஏனையவர்கள் உயிருடன் இல்லை. ஜே.வி.பி காலக்கட்டத்திலும் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் குறித்த விபரங்கள் தெரியாதவர்கள், குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் பெயரை மட்டும் எவ்வாறு கூறமுடியும்.

இதேவேளை, படையினரிடம் சரணடைந்ததாக பிறர் கூறும் தகவலின் அடிப்படையிலேயே இன்று சிலர் தகவல் கூறுகின்றனர். படையினரிடம் சரணடைந்ததை யாரும் நேரில் பார்க்கவில்லை.

யாரும் படையினரிடம் சரணடைந்தார்களா..? என்பதற்கு ஆதரம் இல்லை. வதந்திகளின் அடிப்படையிலேயே மக்கள் பல்வேறு கதைகளை தெரிவித்து வருகின்றனர்.

இறுதி யுத்தம் தொடங்கியது முதல் 5 ஆயிரம் இலங்கை படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலமிக்க இராணுவத்துக்கே இந்த நிலை என்றால், விடுதலைப் புலிகளுக்கு எப்படியான சேதம் ஏற்பட்டிருக்கும்..?

எவ்வாறாயினும், இலங்கைப் படையினரிடம் இருந்த பலம் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments