சர்வதேச நீதிமன்றமோ, சர்வதேச சட்டமோ எமக்கு அவசியமில்லை : பிரதமர்

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை தீர்மானிப்பது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக சர்வதேச நீதிமன்றமோ சட்டமோ அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான உயிர்களை இழக்க நேரிட்டது.

இந்த நிலையில் 40 ஆண்டுகளாக எம்முடன் போராடிய நாட்டு மக்களை ஒன்றிணைப்பது இலகுவான விடயமல்ல. அரசியல் வாதிகள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

சர்வதேச நீதிமன்றமோ , சர்வதேச சட்டமோ எமக்கு அவசியமில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க நாம் பொறுப்பெற்றுள்ளோம். வேறுயாரும் தேவை இல்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments