அரசாங்கத்தில் இணைய மாட்டேன் - சமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

முக்கியமான பதவியை பெற்றுக்கொண்டு தான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு நான் சென்றது பெரிய கதையாக பேசப்படுகிறது.

நான் அமைச்சு பதவிகளை பெற அங்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் நான் மாநாட்டுக்கு சென்றேன்“ என சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் சமல் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அந்த பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments