நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்

Report Print Ajith Ajith in அரசியல்
advertisement

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கை நாளை சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்காத வகையில் திருத்தப்பட்ட உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் இலங்கையிடம் இந்தியா தமது கரிசனையை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments