இலங்கை படையினருக்கு சீனா வழங்கும் பயிற்சிகளுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்
advertisement

இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேங்க் வங்க்குவாங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்டகாலமாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு வழங்கி பயிற்சிகளுக்கும் ஜனாதிபதி நன்றி கூறியுள்ளார். இந்த பயிற்சிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு காரணமாக பல உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கைளால் நாட்டின் அபிமானத்திற்கும், சுதந்திரத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட சீன பாதுகாப்பு அமைச்சர், தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இலங்கை பொருளாதார, சமூக மற்றும் மக்களின் நலன்களுக்காக வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

advertisement

Comments