தந்தை செல்வாவும், அண்ணன் பிரபாகரனும் தந்த அங்கீகாரம்..!

Report Print Murali Murali in அரசியல்
advertisement

தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் அண்ணன் பிரபாகரனும் மலையக தமிழருக்கு தந்த அங்கீகாரத்தையும், நீட்டிய நேசக்கரத்தையும் இன்றுவரை வேறெந்த வடகிழக்கு தலைமையும் தந்ததில்லை.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர் ஐக்கியத்தை பிரேரிப்போர், ஈழ, மலையக தமிழ் அடையாளங்களை, பரஸ்பர சமத்துவமாக அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் "தமிழ் இலங்கை" அடையாளம் இல்லை என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

advertisement

Comments