புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தல் : ஆறு மாவட்டங்களில் நிறைவு

Report Print Ajith Ajith in அரசியல்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கருத்தரங்கு இதுவரை ஆறு மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பது குறித்து திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டமாக, திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த கருத்தருங்கு இடம்பெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட கருத்தரங்கு நேற்று மத்துகம பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான தெளிவுபடுத்தலோடு ஆரம்பமான இந்த செயற்றிட்டம் இதுவரை ஆறு மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments