வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் மங்கள சமரவீர மீது குற்றச்சாட்டு!

Report Print Steephen Steephen in அரசியல்

நீதிமன்ற கட்டமைப்புக்கான விசேட ஆலோசனை செயலணிக்குழுவின் பணிகள் வெளிநாட்டு நீதிபதிகளின் கண்காணிப்பின் கீழ் நடக்க வேண்டும் என்ற யோசனைக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சோசலிச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டுக்குள் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதன் மூலம் வெளிவிவகார அமைச்சர் சிறுபிள்ளையாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில ராஜா கொலுரே இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு கொள்கை தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடுகளை கொண்டுள்ளார்.

அவர் வேறு நிறுவனங்களின் தேவைக்கு அமைய செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கம் கடனை செலுத்துவதற்காக தேசிய வளங்களை விற்பனை செய்யும் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களை அச்சுறுத்தி சகல அரச வளங்களையும் அரசாங்கம் தனியார் மயப்படுத்தி வருகிறது எனவும் ராஜா கொலுரே குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments