இலங்கை அரசாங்கம் 2 வருட காலத்தில் பொறுப்புக்கூறும் என நம்புவது மடமைத்தனம்!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட280 வரையான இளைஞர், யுவதிகளுக்கு 8 வருடங்களாக பொறுப்புகூறாத இலங்கைஅரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வழங்கும் 2வருட அவகாசத்தில்பொறுப்புகூறும் என நம்புவது மடமைத்தனம். என வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான குரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஜெனீவாவில் இலங்கைக்கு 2வருடங்கள் கால அவகாசம் வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் மேற்படி அமைப்பு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அமைப்பின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கிருஷ்ணபிள்ளை தேவராசா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், 2009ம் ஆண்டு போர், நிறைவடையும் நிலையில் உத்தேசமாக சுமார் 280பேர் வரையில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை அவர்களுடைய மனைவிமார், தாய் தந்தையர், உறவினர்கள், சகோதரர்கள் நேரடியாக படையினரிடம் ஒப்படைத்தனர்.

அவ்வாறு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு போர் நிறைவடைந்து 8 வரு டங்களாக பொறுப்புகூறாத இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் 2 வருடங்கள் கால அவகாசத்தை வழங்கினால் பொறுப்புகூறும் என நம்புவது மடமைத்தனம்.

இல்லை, இந்த அரசாங்கம் புதிய அரசாங்கம் எனவே கால அவகாசத்தை வழங்க வேண்டும். என சிலர் த ற்போது கேட்கின்றார்கள். நாங்கள் கேட்கிறோம் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2வருடங் கள் நிறைவடைந்திருக்கின்றது.

இந்த 2வருடங்களில் நல்லாட்சி அரசாங்கம் குறைந்தபட்சம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்கான பொறிமுறை ஒன்றை கூட அவர்கள் உருவாக்கவில்லை.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை எப்படி வழங்கலாம். அதனை விட கடந்த 13ம் திகதி பிரித்தானியா, அமெரிக்கா, சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளின் தூதுவராலயங் களுக்கு சென்று இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டாம் என கேட்டிருந்தோம்.

ஆனால் அவர்கள் கால அவகாசத்தை வழங்குவதையே விரும்புகின்றார்கள். ஆக மொத்தத்தில் சர்வதேச நாடுகளும் எங்களுடைய அவலங்களை தங்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவே நினைக்கின்றன.

அதேபோல் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களும் தம்மை தெரிவு செய்த மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

நான் 2019. 5ம் மாதம் 16ம் திகதி வட்டுவாகல் பாலத்தில் வைத்து எனது 19வயது மகனை படையினரிடம் ஒப்படைத்தேன். என்னைப்போல் பல நூற்றுக்கணக்கான பெற்றோர், மனைவிமார், சகோதரர்கள், உறவினர்கள் தங்கள் பிள்ளைகளை இப்படி ஒப்படைத்திருக்கின்றார்கள்.

அதேபோல் மீள்குடியேற்றம், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் போன்றவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படவேயில்லை.

இதேபோல் இலங்கை அரசாங்கம் போர் விதிகளை மீறி செயற்பட்டதும் உண்மை தான். நாங்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்த போது இறுதி நேரத்தில் படையினர் அடித்த ஷெல்கள் விழுந்து எரிந்தது.

ஒரு வெடி சத்தம் வானத்தில் கேட்கும் உடனே பல குண்டுகள் பரவலாக விழுந்து வெடிக்கும். ஆகவே பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது, மக்கள் கு டியிருப்புக்கள் மீது குண்டுகள் போடப்பட்டது.

இத்தனைக்கும் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறவில்லை. இந்நிலையில் அரசாங்கத்திற்கு மேலும் 2வருடங்கள் கால அவகாசம் வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். என அவர் மேலும் கூறினார்.

Comments