புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் - அமைச்சர் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்
advertisement

புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய வகையிலான திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஊடக சந்திப்புகளை நடத்தி கூறிவருகின்றனர்.

எனினும் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் அது சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும்.

சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் அரசியலமைப்புச் சட்டத்தினால் நாட்டுக்கு பயனில்லை.

இதனால், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதும் கட்டாயம் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எதற்கு பயப்பட வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் நாட்டில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு கிடைக்கும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

advertisement

Comments