ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Report Print Vethu Vethu in அரசியல்
advertisement

ஜனாதிபதி மற்றும் பிரதமரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போபோதைய எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையொப்பங்களை போலியாக பயன்படுத்தி, திஸ்ஸ அத்தநாயக போலி ஒப்பந்தங்களை தயாரித்தாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடமைகள் காரணமாக முன்னிலையாக முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனினும் இந்த வழக்கின் மேலும் ஒரு சாட்சியாளரான கபீர் ஹாசீம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement

Comments