மஹிந்தவை தோற்கடித்த பசில் மீண்டும் குழப்பத்தை ஆரம்பித்தார்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த பசில் ராஜபக்ச மீளவும் குழப்பம் விளைவிக்கத் தொடங்கியுள்ளதாக கோட்டே நகரசபையின் முன்னாள் தலைவர் ஜனக ரணவக்க தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய ஒபேசேகரபுர விஹாரையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்பட்ட பெசில் ராஜபக்ச, மஹிந்தவை தோற்கடித்து அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார்.

தற்போது மீளவும் நாடு திரும்பி குழப்பம் விளைவிக்கத் தொடங்கியுள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் கோட்டே பிரதேசத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நாமல் ராஜபக்சவின் நீலப்படையணி உறுப்பினர்களுக்கு மட்டுமே தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

மாலம்பே தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்க மஹிந்த பூரண ஆதரவு வழங்கியிருந்தார்.

தற்போது அந்தப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றார்.

சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாம் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை விரும்புவதில்லை.

நாடு பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ளது. பாதாள உலகக்குழு செயற்பாடுகள் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளன.

நாட்டை பாதுகாக்க வேண்டியதே எமது நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments