ஜீ. எஸ். பி. விவகாரம்: இன்றைய பிரசெல்ஸ் கூட்டத்தில் இலங்கைக்கு பலப்பரீட்சை!

Report Print Samy in அரசியல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கியமான கூட்டத்தொடர் இன்று பெல்ஜியம் - பிரசெல்ஸ் நகரில் ஆரம்பமாகின்றது.

இதன் போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்பீட்டு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் காரணமாக நீக்கப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை மீண்டும் மே மாதத்தில் இருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.

இந்த குழுவினரால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று புதன்கிழமை பெல்ஜியம் - பிரசெல்ஸ் நகரில் இடம்பெறுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இலங்கையின் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்கே ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தொழில்நுட்ப குழுவினர் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments