சுற்றுலா விசாவில் வந்து பெறுமதி வாய்ந்த மாணிக்ககல் விற்பனை

Report Print Vino in அரசியல்

நாட்டுக்குள் சுற்றுலா விசா மூலம் வரும் வெளிநாட்டவர்கள் பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா மூலம் வருகைதந்து மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதனை மீறி நாட்டுக்குள் வருகை தந்து சட்டவிரோதமான முறையில் வர்த்தகத்தினை மேற்கொள்பவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இவர்களை கைது செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிககார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மாணிக்கக்கல் அகழ்வுப் பணிகளின் போது இடம்பெறுகின்ற அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்ப வழிமுறைகளை பயன்படுத்தவுள்ளதாகவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.

Comments