அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படும் கூட்டமைப்பு! தமிழர்களுக்கான அபிவிருத்திகள் தடைப்படுவதாக குற்றச்சாட்டு

Report Print Murali Murali in அரசியல்
advertisement

தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற நல்லத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கழிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்றைய தினம் அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

எதிர்ப்பு மற்றும் இணக்க அரசியல் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

தமிழ் மக்களை பொருளாதார விருத்தியுடன் வாழவிடக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

தாம் மத்திய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் ஈடுபட்டிருந்த போது மகாவலி கங்கை மற்றும் களுகங்கையின் நீரை வடக்கிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தோம்.

அத்துடன், இரணைமடு குளத்தின் நீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு வழங்குவதற்கும், மேலதிகமான நீரை யாழ்ப்பாணத்திற்கு குடி நீராக வழங்குவதற்கும் திட்டமிட்டிருந்தோம்.

எனினும், மாகாவலி நீரை வடக்கிற்கு கொண்டு வந்தால் அதனோடு இணைந்து சிங்கள மக்களும் வந்து விடுவார்கள் என தெரிவித்து அந்த திட்டத்திற்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு அமையப்பெறுகின்ற நல்லத்திட்டங்களை இல்லாமல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நாடகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு பயனற்றதாகவே அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement

Comments