இம்முறை மே தின கூட்டம் தேர்தலுக்கான பலப்பரீட்சையாகும்! முடியுமானால் அலரி மாளிகையை முற்றுகையிடுங்கள்

Report Print Nivetha in அரசியல்

இம்முறை மே தின கூட்டத்திற்கு முடியுமானால் அலரிமாளிகையை முற்றுகையிட்டு காண்பியுங்கள் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூட்டு எதிரணியினறுக்கு சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம் எனவும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கும் நாம் தயாராக உள்ளதாகவும் கூட்டு எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

அது மட்டும் அல்ல அலரி மாளிகையை முற்றுகையிடுவதாகவும் கூறியுள்ளனர்.

போயா தினமல்ல எந்த தினத்திலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது. இதுபோன்ற எத்தனையோ வார்த்தைகளை நாம் அரசியல் வாழ்க்கையில் கேட்டுள்ளோம் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

- One India

Comments