மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஜப்பான் தொழில்நுட்ப குழு இன்று ஆராய்வு

Report Print Ajith Ajith in அரசியல்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பில் ஆராயும் ஜப்பான் தொழில்நுட்ப குழு இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் செல்ல உள்ளது.

நேற்றையதினம் பிற்பகல் இந்த குழு இலங்கை வந்தது.

இந்த குழுவினர் ஏற்கனவே தங்களது ஆரம்ப ஆய்வை நடத்தி இருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

வான்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் ஊடாக அவர்கள் தொடர்ந்தும் இன்று ஆய்வுகளை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments