மங்களவுக்கு வாழ்த்து கூறிய இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி

Report Print Ramya in அரசியல்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

தற்போது ரோமில் உள்ள வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சருக்கு இன்று காலை அழைப்பினை மேற்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தன்னால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களில் அதிக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீரவிடம் தொலைபேசி உரையாடலின் போது கேட்டுக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்றும் சில புதிய முகங்களின் செயற்பாடுகள் புலப்படும் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments