நானே கூட்டு எதிர்க்கட்சியினருக்கு காலி முகத்திடலை வழங்கினேன் - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

தான் தலையிட்டே கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத்திடல் மைதானத்தை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டு குழுவினரிடம் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

காலி முகத்திடலை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வழங்கியதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த தொடர்புமில்லை எனவும், பிரதமருக்கு எதுவும் தெரியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரதமரின் தலையீடு காரணமாக காலி முகத்திடல் வழங்கப்பட்டதாக பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ரணில் - பசில் உடன்பாடு காரணமாகவே கூட்டு எதிர்க்கட்சியினருக்கு காலி முகத்திடல் வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது

Comments