இப்போ பணத்துக்காக சிபிஐ ரெய்டு! அப்போ பிரபாகரன் வீட்டில் தங்கியதால் ரெய்டு!

Report Print Samy in அரசியல்
advertisement

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால் இப்போது சிபிஐ ரெய்டு நடக்கிறது. ஆனால் 1982ல் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்ததால் ரெய்டு நடந்தது.

1982ல் என் வீட்டில் காவல்துறையின் ரெய்டும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் என்று தலைப்பில் தனது வீட்டிலும் பழ.நெடுமாறன் வீட்டில் 1982ல் ஏன் சிபிஐ ரெய்டு நடைபெற்றது என்பதை விரிவாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் பேஸ்புக்வில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

சமீப காலமாக "சிபிஐ ரெய்டு" எனப்படும் ப்ரேக்கிங் நியூஸ் பரபரப்பாக பேசப்படுகின்றன.

அதாவது அரசியலில் பழிவாங்கும் போக்கிலோ, நாட்டு விரோதிகளோ என சூழல்களை சொல்லிக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சிலர் வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இந்த வாடிக்கை 1991ல் இருந்து நடந்து கொண்டு வருகிறது.

கடந்த 22-05-1982 அன்று திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி. மோகன்தாஸ் மேற்பார்வையில் காவல் துறையின் ரெய்டு நடத்தப்பட்டது.

ஏனெனில் என்னுடன் விடுதலைப்புலிகள் பிரபாகரனும், அவருடைய சகாக்களும் தங்கியிருந்தனர். மயிலாப்பூரில் தங்கியிருந்த போது இந்த நிகழ்வு நடந்தேறியது.

35 ஆண்டுகள் கடந்து விட்டன. சுதந்திரம் பெற்றதில் இருந்து அதுவரை இதுபோல காவல்துறையின் சோதனைகள் அதிகம் நடந்தது இல்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலை காலங்களில் ஓரிரு இடங்களில் நடந்தது. அப்படி காவல் துறையினர் சோதனை நடத்திய போது நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றோமே தவிர முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு செல்லவில்லை.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தம்பி பிரபாகரன் பற்றி பதிவு செய்யவும் இந்த ரெய்டுகள் உதவியாக இருக்கின்றன.

அன்று 1982ல் என் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவெனில் தம்பி பிரபாகரனும் அவரது ஆரம்பக்கால சகாக்களான பேபி சுப்ரமணியன், நேசன், செல்லக்கிளி ஆகியோர் என் வீட்டில் தங்கியிருந்தனர் என்பது தான்.

என்னிடம் அது குறித்து விசாரித்தார்கள். ஆம், தங்குவதற்கு இடம் அளித்தேன். என் இனப் போராளிக்கு, தமிழின விடுதலைப் போராளிகள் தங்குவதற்கு இடம் அளித்தேன் என்பதை பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தேன்.

advertisement

அந்த வழக்கில், நானே சாட்சியாகவும், வழக்கறிஞராகவும் ஆஜரானேன். பிற்காலத்தில் இந்த வழக்கு பிரபாகரன் நீதிமன்றத்துக்கு வராததால் 23-11-2012ல் சென்னை மாநகர் 7வது கூடுதல் நீதிமன்றத்தில் (வழக்கு எண். எஸ்.சி.8/1983) தள்ளுபடியானது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

திரும்பவும் பழைய செய்திக்கு வருகின்றேன். அந்த சோதனையில் ஆயுதங்களோ, பணக்கட்டுகளோ பறிமுதல் செய்யப்படவில்லை. அவற்றை எல்லாம் விட விலை மதிப்பிட முடியாத புத்தகங்கள், சில நினைவுகளின் அடையாளங்களை காவல் துறையினர் அள்ளிச் சென்றனர்.

காமராஜரிடம் அறிமுகமாகி, மாணவர் அரசியல் இயக்கங்களில் பணியாற்றியதெல்லாம் நெஞ்சத்தை தணிக்கும் பழைய நினைவுகள் தாங்கிய கறுப்பு வெள்ளைப் படங்கள், பிரதமர் இந்திரா காந்தி, மொராஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஆளுமைகளோடு எடுத்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் யாவும் காவல் துறை எவ்வித மனித நேயமில்லாமல் எடுத்து சென்றுவிட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் - முகுந்தன் இடையே சென்னை பாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை காரணம் காட்டி பிரபாகரன் தங்கியிருந்த இடம் என கூறி காவல் துறை சோதனை நடத்தியது.

உடன் தங்கியிருந்த பிரபாகரனின் உடைமைகளையும் என் மயிலாப்பூர் இல்லத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஐ.ஜி. மோகன்தாஸ் தலைமையில் 6 மணி நேரம் சோதனை நடத்தி அனைத்து உடைமைகளையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த சோதனை, பாண்டிபஜார் சம்பவத்திற்கு பின்னர் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் என்றொரு இயக்கமும் அதன் தலைவராக பிரபாகரன் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது என்றால் அது மிகையாகாது.

தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரனின் படம் முதன்முறையாக தமிழக பத்திரிக்கைகளில் அன்று தான் வெளியானது.

அதுவரை ஈழத்தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் ஆகியோர்களை மட்டுமே ஈழத்தமிழர்களின் தலைவர்களாக உலகம் அறிந்திருந்தது.

தலைவர்களோடு நான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஐ.ஜி மோகன்தாஸை கடற்கறை சாலையில் உள்ள காவல் துறை இயக்குநரகத்தில் சென்று சந்தித்தேன்.

என் கட்சிக்காரர்களுக்காக வழக்கு நடத்தும் கேஸ்கட்டுகளை கொண்டு சென்று விட்டீர்கள், நான் எப்படி அந்த வழக்குகளை நடத்த முடியும் என அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

எம்.ஜி.ஆரின் அரசாங்கத்தில் அதிகாரப் பலம் வாய்ந்த ஒருவர் என்ற அதிகாரப் போதையில் கிண்டலும் கேலியாகவும் பதில் அளித்தார் மோகன்தாஸ்.

கோபத்தில் உச்சத்திற்கு சென்ற நான் "போயா, நான் முடிந்ததை பார்க்கின்றேன்" என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து முறையிட்டேன். அவர் அன்றைய உள்துறை செயலாளர் டி.வி.வெங்கட்ராமனை சென்று பார்க்கும்படி கூறினார்.

அந்த சோதனையில் மேசை, நாற்காலி, கட்டில், மெத்தை, துணிகள், சமையல் பாத்திரங்கள் தவிர அனைத்து பொருட்களையும், பிரபாகரன் பயன்படுத்திய சில உடமைகளை அள்ளிச் சென்றனர். வெங்கட்ராமனை சந்தித்த போது அவரும் பார்க்கிறேன் என்றார்.

தலைமைச் செயலகத்துக்கும், கடற்கரை எதிரே உள்ள காவல்துறை தலைமையகத்திற்கும் அலைந்து அலைந்து என் காலணிகளே தேய்ந்தது.

தம்பி பிரபாகரன் அவர் பயன்படுத்தி வந்த ரெமிங்டன் டைப்ரைட்டிங் மிஷினை மட்டும் மீட்டுத் தரும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தேன்.

advertisement

இதற்கிடையில் தினமும் சென்னை மத்திய சிறைச்சாலைக்கு சென்று பிரபாகரன், முகுந்தனை சந்திப்பது வாடிக்கை.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

பிரபாகரனை இலங்கை அரசிடம் ஒப்படைக்க கூடாது என்று பழ.நெடுமாறன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் 29-06-1982ல் நடைபெற்றது.

பிரபாகரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்க 05-08-1982ல் நான் மனு தாக்கல் செய்து அவருக்கு பிணை உயர்நீதிமன்றம் வழங்கியது.

ஆனால் அவர் சிறையில் இருந்து 06-08-1982 மாலை விடுவிக்கப்பட்டு மதுரையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வெளியே வந்தார்.

பின்னர் பிரபாகரன், முகுந்தன், சபாரத்தினம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் உள்ளிட்டோரை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை நெடுமாறன் ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை.

பின்னர் மதுரையில் நெடுமாறன் வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தார். முகுந்தன் சென்னையில் தங்கியிருந்தார்.

1985-ல் பிரபாகரன் இந்த வழக்கு விசாரணைக்காக வருவார் என காத்திருந்த தருணத்தில் இலங்கைக்கு சென்றுவிட்ட தகவல் கிடைத்தது. பின்னர் 1986-87 கால கட்டத்தில் மீண்டும் தமிழகம் வந்தார் பிரபாகரன்.

இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.


You May Like this Video...
advertisement

Comments