வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டியில் 1800 சட்டவிரோத கட்டடங்கள்!

Report Print Ramya in அரசியல்

வெள்ளவத்தையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கட்டடம் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டமையாலேயே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிய பகுதிகளுக்கு இடையில் 1800 இற்கும் அதிகமான கட்டடங்கள் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை பகுதியில் உள்ள மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற இந்த பேரனர்த்தம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இரண்டாவது நாளான இன்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments