களத்தில் அகிம்சையோடு ராஜதந்திர ரீதியில் சம்பந்தன்!

Report Print Nesan Nesan in அரசியல்

இலங்கை தீவில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக அன்று தந்தை செல்வா அகிம்சை ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்து அதில் எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் தான் ஆயுதபோராட்டமானது எமது இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது என காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வு நேற்று காரைதீவு கடற்கரை காளி கோயில் அருகாமையில் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

65 வருடகாலமாக நடைபெற்ற அகிம்சை, ஆயுத ரீதியிலான பேரராட்டங்களில் வாயிலாக எமது இனத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் இன்று த.தே.கூட்டமைப்பானது இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்றது.

35வருடகாலமாக ஆயுத போராட்டமானது நடைபெற்றிருந்த வேளை பல நாடுகளின் ஒன்றிணைந்த சதியினாலும், சூழ்ச்சியினாலும் ஆயுத போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.

அன்று எமது உறவுகளான தமிழ் இனத்தை அழிந்து மிருகத்தனமாக கொன்று குவித்த நாள்தான் மே 18 என்பதனை ஒவ்வொரு தமிழனது உயிர் இருக்கும் வரைக்கும் மறக்கமாட்டான்.

இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக சம்பந்தன் ஐயா இன்று களத்தில் நின்று அகிம்சை ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் போராடி வருகின்றார் எனவும் கூறினார்.

Comments