இலங்கையில் அடைமழை தொடரும்! பலத்த காற்றும் வீசும்!

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்மாகாணங்களில் கடும் காற்றுடனும் இடியுடனும் கூடிய மழைபெய்யுமென்று வானிலை அதிகாரியான மொஹமட் சாலீதின் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"தென்மேல் பருவப்பெயர்ச்சி காற்று வீசுவதால் தென்மேற்குப் பிராந்தியங்களில் மழைபெய்யும். சில இடங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மலைநாட்டுப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கரையோரப் பகுதிகளிலும் காற்று வீசும்.

இடிமின்னல் தாக்கத்தின் அபாயமிருப்பதால் மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன், மீனவர்களும் கடலுக்குச் செல்வது குறித்து அவதானமாகவே இருக்கவேண்டும். வானிலை அறிவிப்புகளைக் கேட்டறியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments