மோடியின் அழைப்பை ஏற்றார் மஹிந்த!

Report Print Rakesh in அரசியல்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

சர்வதேச வெசாக் தின வைபவத்துக்கு இலங்கைக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர், மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது பிரத்தியேக அழைப்பை விடுத்திருந்தார்.

மோடியின் இலங்கை விஜயத்தின்போது அவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகிய மூவரும் சந்தித்தபோது இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Comments