சட்ட மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

Report Print Kamel Kamel in அரசியல்

சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது.

உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்ய எவ்வித சந்தர்ப்பமும் வழங்காது, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகி உள்ளது என நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தீர்ப்பு ஒன்றின் பின்னர் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய 42 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

எனினும், வழக்குத் தீர்ப்பு அளித்து நான்கு நாட்களில் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக சட்ட மா அதிபர், நாடாளுமன்றிற்கு அறிவித்தமையானது அரசியல் பக்கச்சார்பு நிலையை பிரதிபலிப்பதாக குறித்த பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்ட மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Comments