தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் அநீதியானது! அப்துல் ஹாலீம்

Report Print Kamel Kamel in அரசியல்

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் அநீதியானது என தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹாலீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அரசாங்கத்தை அசௌகரியத்தில் ஆழ்த்தும் சதித் திட்டமே இந்தப் போராட்டத்தின் பின்னணியாகும்.

காலி கோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய தபால் காரியாலயங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான காரியாலயங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான முயற்சிகளே எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் ஹாலீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் இன்றும் நாளையும் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் தபால் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக முடங்கும் என தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சின்தக பண்டார தெரிவித்துள்ளார்.