ஞானசாரர் பின்னணியில் மஹிந்த அணியினர்!

Report Print Samy in அரசியல்

பொதுபல சேனா பௌத்த அமைப்பு ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட போதிலும் இப்போது எமக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஞானசார தேரரை நான் காப்பாற்றவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை மஹிந்த ராஜபக்சவே காப்பாற்றுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் அவர் தலைமறைவாகியுள்ள நிலையிலும் அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாதுகாத்து வருகின்றார் என பொது எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.