புல்மோட்டையில் கனிய மணல்: சர்வதேச மயப்படுத்துவதற்கு முன்வந்துள்ள இந்தியா

Report Print Mohan Mohan in அரசியல்

திருகோணமலை - புல்மோட்டையில் கனிய மணல் கூட்டுத்தாபனமானது இலங்கைக்கு இலாப மீட்டும் தேசிய சொத்தாக மாறியுள்ளது.

இதனையும் சர்வதேச மயப்படுத்துவதற்கும் இந்திய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக குறித்த நிறுவனம் செயற்திட்ட அறிக்கை ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனிய மணல் தொழிற்சாலை நடவடிக்கைக்கு இந்தியாவிலுள்ள தாமரபரணி நதியிலிருந்து நீர் பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்திய நிறுவனங்கள் எமது நாட்டு வளங்களை முறையற்ற விதத்திலும் சூறையாடுவதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.