மைத்திரியே நாட்டை காப்பாற்றினார் : அமைச்சர் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவாக முன்னோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருக்குமாயின் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

தேயிலை ஏற்றுமதியை கூட நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு எதிர்கொள்ளவிருந்த பொருளாதார தடையில் இருந்து நாட்டை காப்பாற்றியது.

ஐரோப்பா விதித்திருந்த இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது. ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்தது.

அத்துடன் ஜெனிவா மின்சார நாற்காலி, போர் குற்ற நீதிமன்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.