விக்னேஸ்வரனுக்கு கடும் எதிர்ப்பு! சபையிலிருந்து வெளிநடப்பு செய்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்

Report Print Murali Murali in அரசியல்

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிப்பதற்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபை கூடியிருந்தது.

இந்நிலையில், சபையில் உரையாற்றிய முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை குறித்து முதலமைச்சர் உரை நிகழ்த்தக் கூடாது என ஆளும் கட்சி உறுப்பினர்களான கே.சயந்தன், அஸ்மீன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

எனினும், முதலமைச்சர் உரையாற்றியிருந்தார். இதனையடுத்து, ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

குறிப்பாக அமைச்சர்களான த.குருகுலராஜா மற்றும் ப.சத்தியலிங்கம் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன், அயூப் அஸ்மீன், இ.ஆனோல்ட், பசுபதிப்பிள்ளை, அரியரட்னம், பரம்சோதி, சிராய்வா, சிவயோகன் உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இருந்த போதிலும் முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றியிருந்த நிலையில், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அமைச்சர்களை தாமாகவே பதவி விலக கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement