நாமல் ராஜபக்சவுடன் சென்ற அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

கேகாலை அரநாயக்க பிரதேசத்திற்கு நாமல் ராஜபக்சவுடன் சென்ற அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் சுகாதார பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரநாயக்க மண்சரிவில் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச அரநாயக்க வந்த தினத்தில் அவருடன் சென்ற அரச அதிகாரிகள் இருக்கின்றனர்.

நாங்கள் செல்ல வேண்டியது ஒரு பயணம், எம்முடன் செல்ல முடியாத அதிகாரிகள் இருக்கின்றனர். அந்த அதிகாரிகள் அரசாங்கத்தை விமர்சிப்பர்களாயின் அது முற்றாக தவறு என்றும் கூறியுள்ளார்.

கிராம அதிகாரியாக இருக்கலாம் சமுர்த்தி அதிகாரியாக அல்லது அபிவிருத்தி அதிகாரியாக இருக்கலாம் இவர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள்.

அதிகாரிகள் நாமல் ராஜபக்சவுடன் காணப்படும் வீடியோவை நான் கொண்டு வந்து தருகிறேன். இந்த அதிகாரிகள் எமக்கு தேவையில்லை.

அரசாங்கத்துடன் இணைந்து வரவில்லை என்றால், நாங்கள் கொஞ்சி கொண்டிருக்க மாட்டோம். அவர்களை வெளியேறுமாறு நாம் கூறுகிறோம்.

எமது கொள்கைக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளவர்ளுடன் பணியாற்றி பயனில்லை. அரசாங்க அதிபரை விமர்சிப்போர் இங்கிருந்து அர்த்தமில்லை.

விமர்சிப்பவர்கள் எட்டியாந்தோட்டை பகுதிக்காவது சென்று அழகை ரசித்து விட்டு வரலாம் எனவும் லலித் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.