இலங்கையின் நீதித்துறை தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர் அதிருப்தி

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின், நீதித்துறை சுயாதீனத் தன்மைக் குறித்த விசேட அறிக்கையாளர் டியேகோ கார்சியா சயன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோவின் அறிக்கை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் தற்போதைய சிறப்பு அறிக்கையாளரான, டியேகோ கார்சியா சயன் இந்த அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 35ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பித்தார்.

20 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் மோனிகா பின்டோ, 49 பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். நீதித்துறையில் மொழிப் பிரச்சினை காணப்படுகின்றது. இது பாரிய பிரச்சினையாகும்.

நீதித்துறையில் பயன்படுத்தப்படும் மொழி தெரியாததன் காரணமாகவே பல தமிழர்கள் தண்டனைக்கு உள்ளாகும் நிலை காணப்படுகிறது.

அதேபோன்று நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும், மொழிப் பிரச்சினை தடையாக உள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் இந்தப்பிரச்சினைக்கு அவசரமான தீர்வு காணப்பட வேண்டும்.

அத்துடன் குற்றத்தை ஒப்புகொண்டால் தண்டனை குறையும் என்ற கருத்தை நம்ப வைக்கும் நடவடிக்கைகளையும் சட்டத்தரணிகள் மேற்கொள்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த போதிலும், நீதிமுறைமையில் இன்னமும் மிகவும் ஆழமான காயங்களைக் காண முடிகிறது.

மறுசீரமைப்புக்கான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆயுத மோதல்களின் போது நீதித்துறை மோசமான நிலையில் இருந்ததை காண முடிகிறது.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைமை பரந்துபட்டளவில் உள்ளது. இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கிறது. இதனால், நீதித்துறை மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

advertisement