வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் வெளிநடப்புச் செய்தமைக்கான காரணம்!

Report Print Thamilin Tholan in அரசியல்

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பானவிசாரணை அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுடன்தொடர்புடைய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தன்னிலைவிளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் எனக்கு கருத்தைத்தெரிவிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாத காரணத்தாலேயே சபையிலிருந்து வெளியேறினேன்எனத் தெரிவித்தார் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா.

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள்பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வட மாகாண சபைஇன்று புதன்கிழமை(14) கூடிய நிலையில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்உள்ளிட்டோர் கடும் வாக்கு வாதத்திற்கு மத்தியில் சபையிலிருந்து வெளியேறியமைதொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபை கூடுவதற்கு முன்னதாக சபை நடவடிக்கைக் குழு கூடிச் சபையின்நடவடிக்கைகள் தொடர்பாகத் தீர்மானம் மேற்கொள்வது வழமை. அந்த வகையில் இன்று காலைசபை நடவடிக்கைக் குழு ஒன்று கூடிய போது குறித்த விடயத்தை விவாதமாக்க வேண்டுமெனவேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நான் இந்த விடயத்தைவிவாதமாக்கத் தேவையில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களுக்குத்தன்னிலை விளக்கம் வழங்குவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் மாகாணஎதிர்க்கட்சி என்ற வகையில் எனக்கும் கருத்துத் தெரிவிக்கச் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமெனக் கேட்டிருந்தேன்.

அவ்வாறில்லாமல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சபையில்தன்னிலை விளக்கம் தெரிவிக்காமல் முதலமைச்சர் மாத்திரம் இது தொடர்பானஅறிவித்தலை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், இன்று சபையில் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அமைச்சர் ஐங்கரநேசனுக்குஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தன்னிலை விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பம்வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான என்னுடைய கருத்தைச் சபையில்தெரிவிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால்,எனக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இதனை ஆட்சேபித்தே ஜனநாயக மறுப்பு எனத் தெரிவித்து நான் சபையிலிருந்துவெளிநடப்புச் செய்தேன். என்னுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பாகத் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட இரு உறுப்பினர்களும்சபையிலிருந்து வெளியேறினார்கள் என்றார்.