விஷ காகிதத்தால் ஆன புத்தகங்கள் தொடர்பான குற்றச்சாட்டை முற்றாக மறுத்த அமைச்சர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

அரசாங்கத்தால் பாடசாலையில் மாணவர்களுக்கு விஷ காகிதத்தால் ஆன புத்தகங்கள் வழங்கப்பட்டதாக வைத்தியர் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுளள் விடயத்தை அமைச்சர் ராஜித சேனாரத்ன முற்றாக மறுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விஷ காகிதங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதாக கூறப்படும் புத்தகங்களின் காகிதங்கள் ITI என்ற தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிபாரிசிற்கு பின்னரே பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் அந்த பரிசோதனைக்கான ஆவணத்தை செய்தியாளர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், வைத்திய சங்கம் சுகாதாரம் தொடர்பிலோ தமது உரிமைகள் தொடர்பிலோ கவனம் செலுத்தவில்லை. அரசாங்கத்தை சிரமங்களுக்கு உள்ளாக்குவதிலேயே கவனம் செலுத்திவருகின்றன.

இவ்வாறான உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவித்து பெற்றோரை குழப்ப பார்க்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.