வடமாகாண சபைக்குள் குழப்பம்! முக்கிய தகவலை வெளியிட்ட அவைத்தலைவர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல்களை விசாரிப்பதற்கு இதுவரையில், 20 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நி்லையில் அவ் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மூன்று பேர் கொண்ட குழுவினை அமைத்திருந்தார்.

அக் குழு அண்மையில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது. அது தொடர்பிலான விவாதம் ஒன்று இன்று விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட சீ.வி,கே சிவஞானம் அமைச்சர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவிற்கான செலவு இருபது லட்சம் என்ற தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.