ரணிலைச் சந்தித்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் ஸகவுல்லாஹ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் ஸகவுல்லாஹ் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாகிஸ்தானின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் சப்ராஸ் அஹமட் கான் சிப்ரா மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.