தமிழீழ மக்கள் விவகாரத்தில் மௌனமாக நகரும் ஐ.நா மனித உரிமை சபை

Report Print Thayalan Thayalan in அரசியல்

கடந்த 06 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமை சபையின் 35 ஆவது கூட்டத்தொடரில் தமிழீழ மக்கள் விவகாரம் மிகவும் மௌனமாக நகருகிறது.

ஆங்காங்கே சிறு சிறு பக்கக்கூட்டங்கள் தமிழீழ மக்கள் விவகாரத்தில் நடைபெற்ற பொழுதும் இச் சபையின் பிரதான மண்டபத்தில் சிறிலங்கா விடயம் இம்முறை சூடு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரையில் நடைபெற்ற உரைகளில் பிரித்தானிய தவிர்த்த வேறு எந்த நாடு அன்று வரை சிறிலங்கா விடயத்தில் பிரதான மண்டபத்தில் உரையாற்ற வில்லை.

கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை பிரதான சபையில் உரையாற்றிய வழக்கறிஞர்கள், நீதிபதிகளும் ஐ.நா பிரதிநிதி சிறிலங்காவின் விடயத்தை மிகமிக சுருக்கமாக கருத்து தெரிவித்ததை தொடர்ந்து சிறிலங்காவின் ஐ.நா பிரதிநிதி அதற்கான பதிலை சபையில் கூறியிருந்தார்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால் கடந்த இரு நாட்களாக நடாத்தப்பட்ட மக்கள் கூட்டங்களில் உண்மை செய்திகளும், தொழில் பற்றி உலகின் பல முக்கிய புள்ளிகள் உரையாற்றினர்.

இன்று புதன்கிழமை சர்வதே அமைப்புக்களினால் நடாத்தப்பட்ட மக்கள் கூட்டங்களில் தமிழீழ மனித உரிமைகள் மைய பிரதிநிதிகளான டியேல் மக்கோணல், ச.வி. கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

அத்துடன், முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் திருமதி மேரி நோபின்சன், பின்லாந்தின் முன்னாள் ஐனாதிபதி திருமதி ரார்ஜா கலானோன் ஆகியோருடனான சந்திப்பை தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.