எதிர்க் கட்சித் தலைவரை பேசவிடாது தடுத்த அஸ்மின்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் தவராசா இன்றைய அமர்வில் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் இன்றைய விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

வட மாகாண அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் என்றும் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நி்லையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர்களுக்கு தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கான கால அவகாசம் இன்று வழங்கப்பட்டது.

இதன்பின்னர் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் எதிர்க் கட்சித் தலைவர் தவராசாவிற்கு இது குறித்து பேசுவதற்காக அனுமதி கொடுத்தார். இதற்கு ஆதரவாக மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் ஆதரவாக பேசியிருந்தார்.

எனினும் குறுக்கிட்ட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின், எதிர்க் கட்சித் தலைவர் தவராசாவிற்கு பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுமாயின் இது குறித்து பேசுவதற்கு ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான அனுமதியினை வழங்க வேண்டிவரும். எனவே அவரைப் பேச அனுமதிக்க முடியாது என்று கூறி, அவருக்கான சந்தர்ப்பத்தை தடுத்துவந்துள்ளார்.

இன்றைய தினம் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர்களுக்கு தன்னிலை விளக்கம் வழங்குவதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.