முதலமைச்சரை பதவியில் இருக்க அனுமதிக்கமாட்டோம்! பொன்சேகா அறிந்துதான் கூறியுள்ளார்

Report Print Sumi in அரசியல்
advertisement

வடமாகாண சபையின் ஏனைய காலம் வரைக்கும் முதலமைச்சரை பதவியில் இருக்க அனுமதிக்கமாட்டோம் என்று தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் நீதிக்கான உறுப்பினர்கள் சார்பில் இன்று (17) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையினை சபையில் பெரும்பான்மையுடன் நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.

அடுத்த முதலமைச்சராக சீ.வி.கே.சிவஞானம் பெரும்பான்மை பெற்றுள்ளார். 3 பொறிமுறைகளின் மூலம் சீ.வி.விக்னேஸ்வரனின் பதவியை விலக்கடிப்போம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில தினங்களாக வடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான பிரச்சினை அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

மாகாண சபை நிலைப்பாடுகள் வினைத்திறன் அற்றதாக செயற்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில் வடமாகாண முதலமைச்சருடன் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆளும் கட்சியின் குழுத் தலைவர் என்ற முறையில் வடமாகாண முதலமைச்சர் தலைமைத்துவத்தினை வழங்குவதனை தவிர்த்துக்கொண்டார். கட்சி அடையாளங்களை தாங்க வில்லை நீதிக்காக உழைப்பதே நோக்காக இருந்தது.

இந்த வகையில் தான் வடமாகாண அமைச்சர் ஒருவர் முதலமைச்சரை தனது நலனுக்காக பிழையாக நடத்துவதை அவதானித்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதே ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து அவதானித்தோம். அவற்றிற்கு எதிராக வடமாகாண சபையில் குரல் எழுப்பினோம்.

பல தடவைகள் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரத்தியேகமாக முதலமைச்சருக்கு தெரிவித்த போதும் எமது முறைப்பாடுகள் தெடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டினை ஆளும் கட்சி விவகாரமாக கையாண்டிருக்க முடியும். தனது அமைச்சரவை விடயமாகவும் கையாண்டிருக்க முடியும்.

advertisement

குறித்த அமைச்சர்களுக்கு எதிரான முறைப்பாட்டில் செவிசாய்க்காமல் இருந்த நிலையில் பொதுவெளியில் பேச வேண்டி ஏற்பட்டது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

முதலமைச்சர் என்ற வகையில் கூட்டுப் பொறுப்பிற்குள்ளாக்கப்பட வேண்டியவர் சட்டத்திற்கு அமைவான விதிமுறைகளைத் தவிர்த்து அமைச்சரவை தெரிவுக்குழுவின் ஊடாகவே அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

தானும் விசாரிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே தனது ஆலோசனைக்குழுவினை அமைத்தார்.

தனது நெருங்கிய சகாவான விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசரனை காப்பாற்றுவதற்காக பொதுமைக்குள் தள்ளப்பட்டார்.

இதன் விளைவாக இரு அமைச்சர்கள் தமது பதவிகளை தியாகம் செய்ய வேண்டும். ஏனைய இரு அமைச்சர்களும் விடுப்பில் செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆளும் கட்சியின் குழுத்தலைவர் என்ற வகையில் முறையான தலைமைத்துவத்தினை வழங்க தவறிவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முதலமைச்சரின் செயற்பாடுகள் நம்பகத்தன்மையுடையதாக இல்லை. அவர் மீதான நம்பிக்கையினை இழந்துள்ளோம்.

முறையற்ற விசாரணைக்குழுவினை அமைத்துவிட்டு, விசாரணைக்குழுவின் அறிக்கை சட்டத்தில் வலுவற்றவதாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே தெரிவுக்குழுவினை கோரினோம் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது, குருகுலராஜா ஏன் இன்னும் இராஜினாமா கடிதத்தினை வழங்கவில்லை. என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

குருகுலராஜா பதவிக்காக ஆசைப்பட்டு பதவியை இராஜினாமா செய்யாமல் இருக்கவில்லை. முறைமையின் ஊடாக தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

ஊழல் குற்றம் புரிந்த பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்னும் முதலமைச்சருடன் தான் இருக்கின்றார் என்றும் கேசவன் சயந்தன் சுட்டிக் காட்டினார்.

3 பொறிமுறைகளை முன்வைத்துள்ளோம். அதாவது வடமாகாண சபையில் நம்பிக்கை இல்லா பிரேரணையினைக் கொண்டு வந்து முதலமைச்சரை தோற்கடிப்பது.

அதனூடாக ஏனைய அமைச்சர்களை பதவி நீக்குவது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட பொறிமுறை.

புதிய முதலமைச்சர் ஒருவரை நியமிக்குமாறு உறுப்பினர்கள் ஆளுநரிடம் தமது கட்சி செயலாளர் ஊடாக கோருவது.

பழைய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன், புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவது, நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று எந்த பிரகடனமும் செய்யப்படாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரவும் முடியும்.

advertisement

புதிய முதலமைச்சர் என்ற சிபாரிசுகள் தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. அதில் சீ.வி.கே.சிவஞானம் பெரும்பான்மையை பெற்றுள்ளர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அத்துடன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. சபையில் நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என உறுதியளித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 15 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராகவும், 14 உறுப்பினர்கள் சார்பாகவும் உள்ளனர்.

சபையில் பெரும்பான்மையை நிரூபித்து அகற்றுவது, ஆளும் கட்சி தலைவர் ஒருவரை நியமித்து முதலமைச்சரை அகற்றுவது என அனைத்து தெரிவிற்குமான நிலைப்பாட்டில் உள்ளனர்.

சமரசத்திற்கான நடவடிக்கைகள் ஏதும் உள்ளதாக என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சமரசத்திற்கான ஒரு கூற்றினைக்கூட தவறவிடமாட்டோம்.

சமரசத்திற்கான அனைத்து வாய்ப்புக்களையும் இறுதிவரை பயன்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.

தனக்கு எதிரான சதியினை சரத்பொன்சேகா அறிந்துதான் கூறியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார் என கேட்டதற்கு, சரத் பொன்சேக்காவின் வார்த்தையில் தங்கியிருக்கின்றார்கள் என்றார் அந்தளவிற்கு பலவீனமாக முதலமைச்சர் உள்ளார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தினைக் கொண்டு வருவதற்கு ஏன் மக்களின் கருத்தினைக் கேட்கவில்லை என கேள்வி எழுப்பியதற்கு, தேர்தலை மட்டுமே மக்களின் ஆணையாக கொள்கின்றோம்.

ஜனநாயக கட்சி என்ற வகையில் ஏன் மக்களின் அபிப்பிராயத்தினைக் கேட்கவில்லை? மக்களின் அபிப்பிராயத்தினைக் கேட்பதற்கான பொறிமுறை இல்லை.

அது தேர்தல் காலத்தில் மட்டுமே அந்த பொறிமுறையினைப் பயன்படுத்த முடியும்.

முதலமைச்சரின் முயற்சியால் ஒரு அங்குலம் நிலம் கூட விடுவிக்கப்படவில்லை. ஒரு அரசியல் கைதி கூட விடுவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

குருகுலராஜா எப்போது பதவி விலகுவார்? முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும், அவரது அமைச்சரவை தொடர்ந்தும் பதவியில் இருக்கும் என்ற நிலையில் தான் எழும்.

அவர் பதவியில் இல்லை என்ற போது அவர் பதவி விலக வேண்டும் என்ற கேள்வி எழமாட்டாது என்றார்.

தெற்கில் முதலமைச்சரின் நடவடிக்கையினை வரவேற்றுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல் தொடர்பில் முதலமைச்சரின் நடவடிக்கையில் வடமாகாண ஆளுநரை தலையிட கூடாது என்று தெரிவித்துள்ளமையினால் அது ஒரு சிறந்த செயற்பாடு தானே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஊழலை விசாரிப்பது என்பது நிச்சயமாக சிறந்த உதாரணம். அந்த முன்னுதாரணமாக நாங்கள் திகழ வேண்டுமென்றே அந்த கோரிக்கையினை முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஊழல் விசாரணையினை விசாரிக்க வந்தார் என்ற அடிப்படையில் அவர் மீது இன்னும் மதிப்பு இருக்கின்றது.

விசாரிப்பதற்கு அவர் தெரிந்தெடுத்த முறை தவறானது 3 பொறிமுறைகளின் மூலம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்ய முடியுமென கூறுகின்றோம்.

சபை அமர்வில் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் அகற்றுவதாக இருந்தால், முதல் தெரிவில் மிகுந்த உறுதிப்பாட்டினை உணர்ந்துள்ளோம்.

இருக்கும் ஒன்றரை வருடத்திற்குள் இந்த பிரச்சினையை சட்ட சிக்கலுக்குள் மாற்றி, ஒன்றரை வருடத்திற்கும் அவர் பதவியில் இருக்க அனுமதிக்கமாட்டோம் எனவும் தமிழரசு கட்சியின் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

advertisement