சம்பந்தனின் பதில் வரும்வரை எதையும் கூற முடியாது: விக்னேஸ்வரன்

Report Print Sumi in அரசியல்
advertisement

எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அதற்கு அவர் பதில் தரும் வரைக்கும் தன்னால் எதனையும் கூற முடியாது என்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையை தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் முதலமைச்சரின் வீ்ட்டில் அவரைச் சந்தித்திருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று இரவு எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. அதன்படி, ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிவிட்டு, சம்பந்தனுக்கு பதில் கடிதம் தயாரித்துள்ளேன். அதை இன்று அனுப்பவுள்ளேன்.

நாங்கள் அனுப்பும் கடிதத்திற்கு சம்பந்தன் தரும் மறுமொழியி்ல் இருந்து தான் என்னவிதமான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்பது தெரியவரும். ஆகவே சம்பந்தனின் பதில் வரும் வரைக்கும் என்னால் எதுவும் கூற முடியாது.

அமைச்சர்கள் டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தால் நான் அதனை ஏற்றுக் கொள்ளத்தயாரா இருக்கிறேன் என்றார்.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவாகியிருக்கும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள்- சுதந்திரன்

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

advertisement