வடக்கில் இரு முதலமைச்சர்கள்: வெல்வது யார்?

Report Print Dias Dias in அரசியல்

முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவதுடன், புதிய முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோருவது, நீதியரசர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்று எந்த பிரகடனமும் செய்யப்படாமல் பெரும்பான்மையை நிரூபிக்க கோரவும் முடியும் என சட்டத்தரணியும், வட மாகாண சபை உறுப்பினருமான கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

புதிய முதலமைச்சர் என்ற சிபாரிசுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் சீ.வி.கே.சிவஞானம் பெரும்பான்மையை பெற்றுள்ளர்.

அத்துடன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. சபையில் நிச்சயமாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என உறுதியளித்துள்ளார்

ஆளும் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையாக 15 உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராகவும், 14 உறுப்பினர்கள் சார்பாகவும் உள்ளனர்.

சபையில் பெரும்பான்மையை நிரூபித்து அகற்றுவது, ஆளும் கட்சி தலைவர் ஒருவரை நியமித்து முதலமைச்சரை அகற்றுவது என அனைத்து தெரிவிற்குமான நிலைப்பாட்டில் உள்ளனர்.

சமரசத்திற்கான நடவடிக்கைகள் ஏதும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சமரசத்திற்கான ஒரு கூற்றினைக்கூட தவறவிடமாட்டோம்.

சமரசத்திற்கான அனைத்து வாய்ப்புக்களையும் இறுதிவரை பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.