நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்வீர்களா? மாவையிடம் நேரடியாக கேள்வி

Report Print Sumi in அரசியல்

முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இன்று இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரணை செய்ததுடன், இதன்போது அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களையும் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்கள்.

குறித்த அசாதாரண நிலைமைகள் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் நடாத்தப்பட வேண்டும் என ஆளுநர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

விசாரணைக் குழுவினரால் குற்றமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து கொள்வதுடன், மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நாங்களும் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் மாவை குறிப்பிட்டார்.

மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு தயாராக இருக்கின்றீர்களா? என ஊடகவியலாளர்கள் மாவை சேனாதிராஜாவிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இற்கு பதிலளித்த அவர்,

“அதற்கான பேச்சுவார்த்தையில், முதலமைச்சரும், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும், கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். இது வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்” எனவும் இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.