2 ஆவது தடையாக வடக்கு முதலமைச்சரை சந்தித்த கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள்

Report Print Sumi in அரசியல்
advertisement

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேர ணை சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்திருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் வட மாகாண முதலமைச்சரை 2 ஆவது தடவையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று இரவு 8 மணியளவில் வட மாகாண முதலமைச்சின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வடமாகாணசபை எதிர்கட்சியினரும் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணை ஒ ன்றை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் சமர்பித்திருக்கின்றனர்.

அத்துடன், பிரேரணை சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் தரப்பினருக்கும் தமிழரசு கட்சியின் நீதிக்கான மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையில் பிரச்சினை எழுந்துள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல் எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள்,

சமகாலத்தில் எழுந்திருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் நோக்கில் 2 ஆம் தடவையாக வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.

இந்த சந்திப்பில் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை. நேற்று முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பதில் கடிதம் எழுதியிருக்கின்றார். இது தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றோம்.

மேலும், இணக்கப்பாடுகள் பல காணப்பட்டிருக்கும் நிலையில் சமகாலத்தில் எழுந்திருக்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒளி கீற்று தெரிகின்றது என கூறியிருக்கின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் நாளை மீண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement