நீடிக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகும் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

வடமாகாண அரசியல் சர்ச்சை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுநரின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களினூடாக அறியமுடிகின்றது.

வடமாகாண சபையின் அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று ஆளுனர் றெஜினோல்ட் குரேவினால் இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை போன்றே, அவருக்கு ஆதரவான மனு ஒன்றும் ஆளுனரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனைகளைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, அவர் தமது தீர்மனம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.