குழப்ப நிலையுடன் வடக்கிற்குள் நுழைந்த கருணா

Report Print Sujitha Sri in அரசியல்
advertisement

வடமாகாண சபை விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாணத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு நோக்கி சென்று கருணா அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த கலந்துரையாடல் வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில் முன்னறிவிப்பு எதுவுமின்றி நடந்ததால் அப்பகுதியில் சற்று குழப்பமான சூழல் தோன்றியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே கருணாவின் செயற்பாடு தொடர்பில் வடமாகாண மக்கள் குழப்ப நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஏற்கனவே மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், இந்த கலந்துரையாடல் தொடர்பில் முறையான அனுமதி எதுவும் பெறப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலை காரணமாக மக்கள் அனைவரும் இந்த பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கருணாவின் செயற்பாடு தமக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருணா தனது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement