மாவை சேனாதிராஜா மற்றும் மதத்தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

Report Print Sumi in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் யாழ். மாவட்ட சமயத் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு மாவை சேனாதிராஜாவின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது வடமாகாணத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.