அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன பணிப்பாளர்களுக்கு அழைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன பணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது கடந்த காலங்களில் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக நட்டமடையும் நிலைமைக்கான காரணம் குறித்து பணிப்பாளர் குழாமிடம் நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் நேரடியாக விளக்கம் கோரவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் தற்போது 25 விமானங்கள் உள்ளன. 360 விமானிகளும், ஆயிரத்து 200 விமான பணியார்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 200 பணியாளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.