வடக்கில் நிலவிய அரசியல் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!? வடக்கு சுகாதார அமைச்சர்

Report Print Nivetha in அரசியல்
advertisement

கடந்த ஒருவார காலமாக வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு படாமல் ஒன்றாக இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் தன்னுடைய கருத்தையும், கூட்டமைப்பின் தலைவர்கள் பேசிய கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கூட்மைப்பின் தலைவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

advertisement