வவுனியாவில் காணி அற்றவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை

Report Print Theesan in அரசியல்

வவுனியா - ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் குடியேறாமல் இருக்கும் காணிகளை காணியற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

இதில் ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்ட பகுதியில் பலர் காணியினைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்த போதும் தற்போது 45 குடும்பங்களே வசித்து வருவதாக ஓமந்தை கிராம அலுவலகர் அனுசியா சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே, அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் பல வருட காலமாக குடியேறாமல் இருக்கும் காணிகளை தெரிவு செய்து காணி அற்றவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளரிடம் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.