ஒரு இனத்திற்கு வளப்பங்கீடு அதிகரித்தால் மற்றைய சமூகங்கள் தட்டி கேட்கும்

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்
advertisement

ஒரு இனத்துக்கு மாத்திரம் வளப்பங்கீடு அதிகரிக்குமானால் ஏனைய சமூகங்கள் தட்டிக் கேட்கும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹமம்மட் நஸீர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது அங்கு உரையாற்றிய அமைச்சர்,

கிழக்கு மாகாணத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்களில் வைத்தியர், தாதியர், ஊழியர்கள் போன்ற ஆளணிப் பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

இவ்வாறான சவால்கள் முழு இலங்கையிலும் காணப்படுகின்றமையால் எம்மால் நிவர்த்தி செய்வதில் பாரிய சிக்கல்கள் உள்ளன.

அத்துடன் கிழக்கு மாகாணத்திற்கான முழுமையான அதிகாரம் புதிய அரசியலமைப்பினால் மத்தியரசின் மூலம் கிடைக்குமானால் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அவரால் முடிந்தவரை மத்தியரசின் ஊடாக கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு உதவி வருகின்றார்.

இந்த மாகாணத்தில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்களும் வாழ்கின்றனர். இந்த நிலையில் ஒரு இனத்திற்கு மாத்திரம் வளப்பங்கீடு அதிகரிக்குமானால் ஏனைய சமூகங்கள் அதனை தட்டிக் கேட்கும்.

அவ்வாறு கேள்விகள் இல்லாதவாறே எமது அபிவிருத்தித் திட்டங்களை 04 பிராந்தியங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரைக்கும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அந்தப்பிரச்சினைளுக்கு எல்லாம் முகம் கொடுத்து நாம் அவற்றினை தீர்த்து வைத்து வருவதற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

மேலும், முழு இலங்கையிலும் கிழக்கு மாகாணத்திலேயே அதிகமான ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. இதை மத்தியரசும் கூட ஆச்சிரியமாக பார்த்து வருகின்றது.

இந்த நிலையில் எங்கள் வைத்தியசாலையும் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி தாருங்கள் என பலரும் கேட்பார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டும் என்றால் அதற்கான சில நடைமுறை வளங்கள் சாத்தியமாக வேண்டும்.

அவ்வாறு வளங்கள் சாத்தியம் இல்லை என்றால் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த முடியாது என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, ஷிப்லி பாரூக், கருனாகரன், நடராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement